உங்களது தினசரி செய்திகளை வாசிக்க ஒரு புதிய வழி

தமிழ் முரசு மற்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்களை வாசிக்க விரும்புகிறீர்களா? புத்தம் புதிய செய்தி கைக்கணினி தொகுப்பை $29.90 மாதாந்தர கட்டணத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்!

Samsung Galaxy Tab A7 (Wi-Fi)

  • மதிப்பு: $448
  • முதன்மை திரை அளவு: 263.1mm (10.4″)
  • எடை:476g
  • CPU வேகம்: 2GHz, 1.8GHz (Octa Core)
  • Memory:64GB, able to support up to 1TB of MicroSD
  • முதன்மை கேமரா – பிரிதிறன் (Resolution) : 8.0MP
  • மின்னூட்டி திறன் (Battery Capacity): 7040mAh, 13 மணி நேரம் வரையான இணையப் பயன்பாட்டுக்கு

Samsung Galaxy Tab A7 (Wi-Fi)

  • மதிப்பு: $448
  • முதன்மை திரை அளவு: 263.1mm (10.4″)
  • எடை:476g
  • CPU வேகம்: 2GHz, 1.8GHz (Octa Core)
  • Memory:64GB, able to support up to 1TB of MicroSD
  • முதன்மை கேமரா – பிரிதிறன் (Resolution) : 8.0MP
  • மின்னூட்டி திறன் (Battery Capacity): 7040mAh, 13 மணி நேரம் வரையான இணையப் பயன்பாட்டுக்கு

தமிழ் முரசு மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கைக்கணினி தொகுப்பு

  • தமிழ் முரசு மற்றும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இ-பேப்பரையும் உள்ளடக்கியது
  • SPHtab செயலியைப் பயன்படுத்தலாம்
  • 14 நாட்களுக்கான செய்திகளைப் பெட்டகத்திலிருந்து பெறலாம்
  • ஒரு முறை மட்டும் உள்நுழைவு (login) விவரங்கள் உள்ளீடு செய்தால் போதும்
  • இணையச்சேவை இல்லாதபோதும் வாசிக்க இயலும்
  • சமூக ஊடகங்களில் பகிரலாம்
  • உங்களுக்குப் பிடித்த செய்திகளை மட்டும் பிரித்தெடுக்கலாம்
  • ஓராண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாதம் (Samsung Standard Warranty)

Frequently Asked Questions

கைக்கணினி மீட்பு

  1. எனது கைக்கணினியை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?
    சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வுகள் நடப்பில் இருக்கும் காலத்தில் உங்களது கைக்கணினியை இரு வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.A. நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்வது (முன்பே சந்திப்பு முன்பதிவு செய்ய வேண்டும்)அரசாங்கத்தின் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளையொட்டி, கைக்கணினியை நேரடியாகப் பெற்றுக்கொள்ள சந்திப்பு முன்பதிவு செய்ய வேண்டும். எங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உங்களது ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நாடுகிறோம்.உங்களது சந்திப்பை இங்கு முன்பதிவு செய்யுங்கள்:
    readsph.sg/bookingஎங்கு பெற்றுக்கொள்வது:
    Mojito Redemption Centre, Plaza Singapura,
    68 Orchard Road, #04-60/61, Singapore 238839

    நிலையம் திறந்திருக்கும் நேரம்:

    நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை (தினமும்). பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

    தொடர்பு எண்: 6534 8095

    வீட்டில் விநியோகம் (+$15)

    வீட்டிலேயே விநியோகிக்கும் சேவை $15 கட்டணத்தில் கிடைக்கும்.

    வீட்டில் விநியோகிப்பதற்கான படிவத்தைச் சமர்ப்பித்த தேதியிலிருந்து இரண்டு வாரங்களில் கைக்கணினி வீட்டில் விநியோகிக்கப்படும்.

     

  2. எனக்கு கைக்கணினி கிடைப்பதற்கு முன்பாக தமிழ் முரசின் மின்பதிப்பை நான் அணுக முடியுமா?
    கைக்கணினி சந்தாவை வாங்கிய உடனே, நீங்கள் தமிழ் முரசு இணையப்பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.உங்கள் சந்தாக் கணக்கு விவரங்களுடன் tamilmurasu.com.sg இணையத்தளத்தில் புகுபதிவு செய்து வாசிக்கத் தொடங்கிடலாம்.
  3. எனது சந்தாத் திட்டத்திற்கு எப்போது கட்டணம் விதிக்கப்படும்?
    நீங்கள் சந்தாவை வாங்கிய தேதியில் முதல் கட்டணம் விதிக்கப்படும். இது, 1 ஜூன் 2020 தொடங்கும் உங்கள் சந்தாவின் முதல் காலகட்டத்திற்கானது.*அதற்குப் பிறகு மாதந்தோறும் கட்டணம் விதிக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் கட்டணச்சீட்டு வெளியிடப்படும்.

சலுகை விவரங்களும் தகுதி நிபந்தனைகளும்

  1. இந்தத் தொகுப்பில் என் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் அச்சுப்பதிப்பு உள்ளடங்குகிறதா?
    இல்லை, இது தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாட்களுக்கான மின்னிலக்கமயச் சந்தா. இதில் அச்சுப்பதிப்புகள் உள்ளடங்கவில்லை.
  2. நான் இந்தச் சலுகைக்குத் தகுதி பெறுகிறேனா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
    நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதை அறிய பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.புதிய மற்றும் விநியோகிப்பாளரின் சந்தாதாரர்கள் (உங்கள் வீட்டுக்குச் செய்தித்தாட்களை அனுப்பி வைக்கும் விநியோகிப்பாளருக்குத் தற்போது ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவோர்) அனைவரும் தகுதி பெறுகிறார்கள்.

    தற்போது ஒப்பந்தத்தில் இல்லாத தற்போதைய சந்தாதாரர்கள் (1) செய்தி கைக்கணினி தொகுப்புடன் தங்களது தற்போதைய சந்தாவை மாற்றலாம், அல்லது (2) தற்போதைய சந்தாவுடன் கூடுதலாக மாதத்திற்கு $24.90 (செய்தி கைக்கணினி தொகுப்பின் வழக்கமான கட்டணம் மாதத்திற்கு $29.90) கட்டணத்திற்குச் செய்தி கைக்கணினி தொகுப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    தற்போது ஒப்பந்தத்தில் உள்ள சந்தாதாரர்கள், மாதத்திற்குக் கூடுதலாக $29.90 கட்டணத்திற்கு, செய்தி கைக்கணினி தொகுப்பைத் தங்களது தற்போதைய சந்தாவுடன் சேர்க்கலாம்.

     

    தமிழ் முரசின் புதிய மற்றும் விநியோகிப்பாளரின் சந்தாதாரர்கள்

    புதிய சந்தாதாரர்கள் விநியோகிப்பாளரின் சந்தாதாரர்கள்*
    எப்படி சந்தா சேர்வது tmsub.sg/tablet

    இணையத்தளத்தில் சந்தா சேரவும்

    6388 3838 அழைக்கவும் 6388 3838 அழைக்கவும்
    செய்தி கைக்கணினி தொகுப்பு

    (மாதத்திற்கு $29.90)

    செய்தி கைக்கணினி + தமிழ் முரசு முழு மின்னிலக்கமயத் தொகுப்பு

    (மாதத்திற்கு $47.80)

    செய்தி கைக்கணினி + தமிழ் முரசு முழு மின்னிலக்கமயம் + அச்சுப்பதிப்பு தொகுப்பு

    (மாதத்திற்கு $42.80*)

    செய்தி கைக்கணினி + தமிழ் முரசு அச்சுப்பதிப்பு

    (மாதத்திற்கு $42.80*)

    உங்கள் வீட்டுக்குச் செய்தித்தாட்களை விநியோகம் செய்யும் விநியோகிப்பாளரிடம் தற்போது ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவோர்

    *உங்கள் முகவரியைப் பொறுத்து, $3/$4/$5  மாதாந்தர விநியோகக் கட்டணங்கள் உள்ளடங்கவில்லை.

     

    தற்போதைய சந்தாதாரர்கள்

     

    தற்போதைய சந்தாவுடன் கூடுதலாகச் சேர்க்க விரும்பும் ஒப்பந்தமுள்ள தற்போதைய சந்தாதாரர்கள் ஒப்பந்தம் இல்லாத தற்போதைய சந்தாதாரர்கள்
    எப்படி சந்தா சேர்வது 6388 3838 அழைக்கவும்
    செய்தி கைக்கணினி தொகுப்பு

    (மாதத்திற்கு $29.90)

    எனது தற்போதைய தமிழ் முரசு அல்லது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தாவுடன் செய்தி கைக்கணினி தொகுப்பு சேர்ப்பு

    (மாதத்திற்கு $24.90)

    எனது தற்போதைய தமிழ் முரசு அல்லது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சந்தாவுக்குப் பதிலாகச் செய்தி கைக்கணினி தொகுப்புக்கு மாற்றம்

    (மாதத்திற்கு $29.90)

     

     

  3. இந்தச் சந்தாவுடன் ஒரே சமயத்தில் எத்தனை அணுகல்கள் எனக்குக் கிடைக்கும்?
    Samsung கைக்கணினியில் மட்டுமே அணுகக்கூடிய முன்பதிவேற்றப்பட்ட எஸ்பிஹெச் டாப் செயலி தவிர, தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையத்தளங்கள் இரண்டுக்கும் ஓர் அணுகலும், அவற்றின் செயலிகளுக்கு ஓர் அணுகலும் கிடைக்கும்.நீங்கள் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கைக்கணினி தொகுப்பு சந்தாவை வேறொரு தமிழ் முரசு அல்லது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொகுப்புடன் இணைப்பதாக இருந்தால், இரண்டு சந்தாக்களுக்கு வழங்கப்படும் மொத்த அணுகல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

    எடுத்துக்காட்டாக, நீங்கள் செய்தி கைக்கணினி + தமிழ் முரசு முழு மின்னிலக்கமயத் தொகுப்புக்குச் சந்தா சேர்ந்திருந்தால், எஸ்பிஹெச் டாப் செயலியின் அணுகலும், தமிழ் முரசு இணையத்தளத்திற்கு ஒரே சமயத்தில் 7 அணுகல்களும் கிடைக்கும்.

     

  4. சலுகை எப்போது முடிவடைகிறது?
    தற்போது சலுகைக்கு நிறைவு தேதி இல்லை. ஆனால், எங்களிடம் குறுகிய எண்ணிக்கையிலான கைக்கணினிகளே இருப்பதால், இருப்பு இருக்கும் போதே சலுகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்! 
  5. என் ஒப்பந்தகாலம் முடிவடைந்த பிறகு என் சந்தாவை நான் நிறுத்த விரும்பினால் என்னவாகும்?
    எல்லா சந்தாக்களும் 24 மாத ஒப்பந்தத்தின் அடிப்படையிலானவை. நீங்கள் ஒப்பந்தகாலம் முடிவடைந்த பிறகு சந்தாவை நிறுத்த விரும்பினால்,circs@sph.com.sgமுகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

கணக்கு மற்றும் கட்டணம் செலுத்துதல்

நான் எவ்வாறு கட்டணம் செலுத்துவது?

நீங்கள் சந்தா “Checkout”
பக்கத்தில் கட்டணம் செலுத்தலாம். நாங்கள் பல்வேறு கடன்பற்று அட்டைகளின் வழியாகப் பணம் செலுத்துவதை ஏற்கிறோம்.

 

உதவி வேண்டும்! என் மறைச்சொல்லை மறந்துவிட்டேன்.

நீங்கள் tmsub.sg/reset இணையத்தளத்தில் உங்கள் மறைச்சொல்லை மாற்றியமைக்கலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கைக்கணினியின் பயன்பாடு

  1. உதவி வேண்டும்! என்னால் செயலிக்குள் புகுபதிவு செய்யவோ அல்லது நுழையவோ முடியவில்லை.
    இந்தச் செயலியில் தானியக்கப் புகுபதிவு இயக்கம் இருப்பதால், நீங்கள் முதல்முறை உங்கள் கணக்குக்குள் புகுபதிவு செய்தால் போதுமானது. புகுபதிவு செய்வதில் சிரமங்கள் இருந்தால், உங்கள் உலாவித் திரையின் வலது மேல்கோடிக்குச் சென்று “Settings” பட்டியலைத் திறக்கவும். “Services” பகுதியின்கீழ் “Refresh Login” தேர்ந்தெடுக்கவும். 
  2. எஸ்பிஹெச் டாப் (செய்தி கைக்கணினி) செயலியைப் பயன்படுத்த எனக்கு உதவி தேவைப்படுகிறது.
    செயலியில் உள்ள தனிப்பயிற்சி வழிகாட்டியைப் பயன்படுத்தி செயலியின் அம்சங்களை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் உலாவித் திரையின் வலது மேல்கோடியில் காணப்படும் சின்னத்தைத் தட்டி,Show Tutorial”தேர்ந்தெடுக்கவும்.

Samsung கைக்கணினி

  1. இந்தக் கைக்கணினியில் SIM அட்டை பயன்படுத்த முடியுமா? 

     இல்லை, ஆனால், நீங்கள் அருகலையுடன் (Wi-Fi) இணையத் தொடர்பைப் பெறலாம்.

     

     

  2. என் கைக்கணினியில் மற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும், மின்னஞ்சல் படிக்கவும் முடியுமா? 

    ஆம், கண்டிப்பாக! வழக்கமான கைக்கணினியில் செய்வதைப் போலவே உங்கள் கைக்கணினியில் நீங்கள் மற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்யலாம், உங்களது மின்னஞ்சலைப் படிக்கலாம், இணைய உலாவியைப் பயன்படுத்தலாம்.

     

     

  3.  என் கைக்கணினியின் திரைப் பூட்டையும் திரைத் தோற்றத்தையும் நான் மாற்ற முடியுமா? 

    நீங்கள் எங்களுடன் சந்தா சேர்ந்திருக்கும் காலகட்டத்தில், எஸ்பிஹெச் டாப் செயலி, திரைப் பூட்டு, திரைத் தோற்றம் ஆகியவற்றை எஸ்பிஹெச் நிர்வகிக்கும். உங்களுக்குத் தடங்கலற்ற, இருவழித்தொடர்பு வாசிப்பு அனுபவத்தை வழங்குவது இதன் நோக்கம். உங்கள் வாசிப்பு வசதிக்காக, ஒவ்வொரு நாளின் மின்-செய்தித்தாளையும் உங்கள் செயலியில் நாங்கள் தானாகவே பதிவேற்றம் செய்வதற்கு இது வழிவகுக்கும். உங்கள் சாதனத்தின் நிர்வாகம் தொடர்பான விதிகளையும் நிபந்தனைகளையும் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்கள் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் குறிப்பு 17-ஐ பார்க்கவும்.

     

     

  4. கைக்கணினியுடன் “S” பேனா கிடைக்குமா? 

     இல்லை, கைக்கணினியுடன் “S” பேனா கிடைக்காது.

     

     

  5. Samsung Galaxy Tab A தான் சந்தையில் கிடைக்கும் ஆகப்புதிய வகையா? 

    ஆம், Tab A Wi-Fi 10.1 தான் ஆகப்புதிய வகை (ஜனவரி 28,2020நிலவரப்படி).

சாதனத்தைப் பெற்றுக்கொள்ளுதல், உத்தரவாதம், மாற்றுச்சாதனம்

  1. கைக்கணினிக்கு உத்தரவாதம் உள்ளதா?
    ஆம், கைக்கணினிக்கு Samsung நிறுவனம் ஓர் ஆண்டுகால வழக்கமான உத்தரவாதம் வழங்குகிறது. உத்தரவாதத்தின் விவரங்களுக்கு, தயவுசெய்து tmsub.sg/warranty பார்க்கவும்.
  2. என் சாதனம் தொலைந்துவிட்டது / எனக்கு மாற்றுச்சாதனம் தேவைப்படுகிறது.
    மாற்றுச்சாதனம் தேவைப்பட்டால், வேறெங்கிலும் புதிய சாதனத்தை வாங்கிவிடாதீர்கள். ஏனெனில், எஸ்பிஹெச் நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்கப்படாத சாதனங்களில் எஸ்பிஹெச் டாப் (செய்தி கைக்கணினி) செயலியை எங்களால் நிறுவ இயலாது. புதிய Samsung சாதனம் வாங்க 6388 3838 என்ற எண்ணில் எஸ்பிஹெச் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.
  3. அனுப்பிவைக்கும் சேவைக்குக் கூடுதல் கட்டணங்கள் ஏதும் இருக்குமா?
    வீட்டிலேயே விநியோகிக்கும் சேவை $15 கட்டணத்தில் கிடைக்கும். 
  4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யமுடியுமா (எ.கா. நண்பகல் 12 மணி)?
    இல்லை, துரதிர்ஷ்டவசமாக நீங்கள் விரும்பிய நேரத்தைக் குறிக்க முடியாது. செய்தி டேப்லெட் திங்கள் – சனி (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) வரை வழங்கப்படும். 
  5. பொருள் அனுப்பிவைக்கப்படும் நேரத்தில் நான் வீட்டில் இல்லாவிட்டால் என்னவாகும்?
    கைக்கணினியை உங்களுக்கு அனுப்பிவைக்க அடுத்த 7 நாட்களில் மறுபடியும் அதிகபட்சம் மூன்று (3) முறை முயற்சி எடுக்கப்படும். நீங்களும் 6602 8271 என்ற எண்ணில் அனுப்புநருடன் தொடர்புகொண்டு, உங்களுக்கு வசதியான நேரத்தில் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யலாம். 
  6. எனக்காக வேறொருவர் பொருளைப் பெற்றுக்கொள்ளலாமா?
    முடியும், உங்கள் சார்பில் கைக்கணினியைப் பெற்றுக்கொள்ள வேறொருவருக்கு நீங்கள் அதிகாரம் அளிக்கலாம். உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மீட்புக் கடிதத்தில் உள்ள அதிகாரமளிப்புக் கடிதத்தால் கையெழுத்திட்டு, பொருள் அனுப்புநர் வரும்போது காட்டினால் போதும். 

    அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக, பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது உங்கள் இருவரது (நீங்கள் மற்றும் நீங்கள் அதிகாரமளிப்பவர்) அடையாள அட்டைகளின் அசலை அல்லது நகலைக் காட்டவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். நகல்களை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

     

  7. எனது கைக்கணினியைத் தபால்பெட்டியில், “ரைசர்” அறையில் விட்டுச்செல்ல நான் ஏற்பாடு செய்ய முடியுமா?
    இல்லை. உங்கள் கருவியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சந்தாதாரர் (பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணால் அடையாளம் காணப்படுபவர்) கைக்கணினியைப் பெற்றுக்கொண்டு, அதனை உறுதிப்படுத்த கையொப்பமிடவேண்டும். 
  8. வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சேவையை நான் தேர்ந்தெடுத்தால், எனது கைக்கணினியைச் செயல்படுத்த உதவி கிடைக்குமா அல்லது நானே சொந்தமாகச் செய்துகொள்ள வேண்டுமா?
    கைக்கணினி ஆகச்சிறந்த நிலையில் உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவதை உறுதிப்படுத்த, பொருள் அனுப்புநர் கைக்கணினிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் கையாளுவார். உங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பாக, கைக்கணினி செயற்படுத்தப்படும். நீங்கள் பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது, உங்களது புகுபதிவு அடையாளப்பெயரை (மீட்புக் கடிதத்தில் உள்ளபடி) சரிபார்க்கவேண்டும்.
  9. அவசியமாயின், எனது தொடர்பு விவரங்களை அல்லது அனுப்பிவைக்க வேண்டிய முகவரியை நான் எப்படி மாற்றுவது? நீங்கள் சந்தாவுக்கு ஆர்டர் செய்தபோது தெரிவித்த முகவரியிலும் தொடர்பு விவரங்களிலும் மாற்றம் இருந்தால், தயவுசெய்து 6602 8271 என்ற தொலைபேசி எண்ணில் அனுப்புநருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். 
  10. நான் ஏற்கனவே சந்தாவை வாங்கியுள்ளேன், அடுத்து நான் என்ன எதிர்பார்க்கலாம்?
    நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கும் சேவையைத் தேர்ந்தெடுத்திருந்தால்பின்வருமாறு எதிர்பார்க்கலாம்

     

    நீங்கள் நின்ஜா வேனிடமிருந்து அடுத்த 7 வேலை நாட்களுக்குள் தடமறியும் அடையாள எண்ணை குறுந்தகவல்வழி பெறுவீர்கள்.

     

    தடமறியும் அடையாள எண்ணைப் பயன்படுத்தி, வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நிலவரம் பற்றி 6602 8271 என்ற எண்ணில்  நின்ஜா வேனிடம் நீங்கள் நேரடியாகக் கேட்டறியலாம்.

     

    வீட்டுக்கு அனுப்பிவைக்கும் நாளன்று, உங்கள் வீட்டுக்கு வருவதற்குமுன் நின்ஜா வேன் உங்களுக்குக் குறுந்தகவல் அனுப்பும் அல்லது தொலைபேசியில் அழைக்கும்.

     

    உங்களுக்கு 7 வேலை நாட்களுக்குள் தடமறியும் அடையாள எண் குறுந்தகவலில் கிடைக்காவிட்டால், தயவுசெய்து 6388 3838 என்ற எண்ணில் எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழுவுடன் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் தேடிய விவரம் கிடைக்கவில்லையா?

பொதுவான விவரங்களுக்கு, நீங்கள் இங்குள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கலாம். மாறாக, 6388 3838 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் நேரடித் தொலைபேசி சேவையை அழைத்து, அல்லது circs@sph.com.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உதவி பெறலாம்.

எங்கள் வாடிக்கையாளர் நேரடித் தொலைபேசி சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையிலும், சனி, ஞாயிறுகளில் காலை 8.30 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் செயல்படும். பொது விடுமுறை நாட்களில் செயல்படாது.

中文